கிருபாபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
ADDED :4947 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், 21ம் தேதி கோபுர தரிசனமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கிருபாபுரீஸ்வரருக்கும், மங்களாம்பிகைக்கும் புத்தாடை உடுத்தப்பட்டு, யாக பூஜைகள் செய்து மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயக்குமார், செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன், உற்சவதாரர்கள், குருக்கள் ரவி செய்திருந்தனர்.