உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியாண்டர் கோவில் பங்குனி உத்திர விழா

பழநியாண்டர் கோவில் பங்குனி உத்திர விழா

சென்னிமலை: காங்கேயம் வட்டம் தம்மரெட்டிபாளையத்தில் உள்ள பழநியாண்டவர் கோவிலில் 19ம் ஆண்டு பங்குனி உத்திர விழா, நாளை நடக்கிறது. காங்கேயம் வட்டத்தில் முருகப் பெருமானின் புகழ் பெற்ற கோவிலாக, சிவன்மலைக்கு வடக்கில், நொய்யல் ஆற்றின் தென்திசையில், தம்மரெட்டிபாளையத்தில் பழநியாண்டவர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை, பங்குனி உத்திரவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது.
நாளை காலை, 7.30க்கு விநாயகர் வழிபாடு, 9 மணிக்கு நொய்யல் நதி சென்று தீர்த்தம் எடுத்து வருதல், இரவு, 7 மணிக்கு பழநியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. இரவு எட்டு மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. முருக பக்தர்கள் குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !