ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4637 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாமல்லபுரம், ஸ்தலசயனப்பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக புகழ்பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி உத்திர உற்சவம் நடைபெறுகிறது. இந்தாண்டிற்கான விழா, கடந்த, 17ம் தேதி துவங்கியது. அதைத்தொடர்ந்து, நேற்று வரை, தினமும் மாலை, தாயாருக்கு உற்சவம், ஊஞ்சல் சேவை நடத்தி, உள்புறப்பாடு நடந்தது. இன்று, ஸ்தலசயனப்பெருமாள் மற்றும் நிலமங்கை தாயாருக்கு, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி, பிற்பகல் 2.30 மணிக்கு, இருவருக்கும் சிறப்பு அபிஷேகம், மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மாலை 4:30 மணிக்கு, வீதியுலா, 6 மணிக்கு, திருக்கல்யாணம், அதைத்தொடர்ந்து, திருப்பள்ளியறை எழுதல் ஆகியவை நடக்கிறது.