லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் 29ம் தேதி எண்ணெய் காப்பு உற்சவம்
ADDED :4690 days ago
திருநெல்வேலி: நெல்லை லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் வரும் 29ம் தேதி எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது.நெல்லை டவுன் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் வரும் 29ம் தேதி எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு பஞ்ச‹க்த ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. 10 மணிக்கு எண்ணெய் காப்பு உற்சவமும், தொடர்ந்து வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து திருவாராதனம் மற்றும் சாற்றுமுறை, தீர்த்த கோஷ்டி நடக்கிறது.இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.