உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோவிலில் பங்குனி உத்திர விழா

மலைக்கோவிலில் பங்குனி உத்திர விழா

காரிமங்கலம்: காரிமங்கலம், ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதையொட்டி, கடந்த, 23ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி, காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 10.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்வாமி பவனி வரும் நிகழ்ச்சியை தானப்ப கவுண்டர் மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர் மல்லிகா அன்பழகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மதியம், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மதியம், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 7 மணிக்கு சயன உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். * அரூர் அடுத்த கௌõப்பாறை முருகன் கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் அலகு குத்தியும், டிராக்டர் மற்றும் தேர்களை இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஏராளமான சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். பக்தர்கள் உடல் முழுவதும் எலுமிச்சை பழங்களை கோர்த்தும் வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !