காட்டூர் சிவன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா
ADDED :4599 days ago
திருப்போரூர்: காட்டூர் உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.திருப்போரூர் அடுத்த, காட்டூரில், தையல் நாயகி உடனுறை உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அகத்தியர் வழிபட்ட தலம். இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்திரப் பெருவிழா கொண்டாடப்படுகிறது.நேற்று பங்குனி உத்திரவிழா வெகு சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணிக்குசவாமிக்கு அபிஷேகம், 11:00 மணிக்கு சீர்வரிசையுடன், திருக்கல்யாண வைபவம் நடந்தது.உற்சவத்தில் கலந்து கொண்டசமங்கலிகளுக்கு, மஞ்சள், குங்குமம், வளையல், தாலிக்கயிறு வழங்கப்பட்டது. பகல் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.