பங்குனி உத்திர காவடி ஊர்வலம்
ADDED :4599 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் குறி ஞ்சி ஆண்டவர் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கொடைக்கானல் நகர, ஒன்றிய இந்து முன்னணி மற்றும் வட்டார இந்து மகாஜன சங்கம் சார்பில், ஊர்வலம் நடந் தது. பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட காவடி ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக குறிஞ்சி ஆண்டவர் கோவிலை அடைந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.