நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு 40 கிலோ சந்தனக்கட்டை
ADDED :4687 days ago
சேலம்: சேலத்தில் இருந்து, நாகூர் சந்தனக்கூடு விழாவுக்கு, 40 கிலோ சந்தன கட்டை அனுப்பப்பட்டுள்ளது. நாகூர் தர்காவை சேர்ந்த இஸ்லாமியர்கள், தமிழக முதல்வரை சந்தித்து நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவுக்கு, சந்தனக் கட்டைகள் கேட்டு, மனு கொடுத்தனர். மனுவை பரிசீலனை செய்த முதல்வர், 40 கிலோ சந்தனக் கட்டைகளை இலவசமாக அனுப்புமாறு உத்தரவிட்டால். ஏப்ரல் மாதம் நாகூர் தர்காவில் சந்தனக் கூடு விழா நடக்கிறது. அதற்காக, சேலம், அஸ்தம்பட்டி சந்தனமரக் குடோனில் இருந்து, மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 கிலோ சந்தனக் கட்டைகள், நேற்று மாலை நாகூர் தர்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.