உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்ம கையிலே ஒன்னுமில்லே!

நம்ம கையிலே ஒன்னுமில்லே!

அர்ஜுனன் தன் சுற்றத்தாருடன் போர்புரிய தயங்கி நின்றான். அப்போது கிருஷ்ணர், துரியோதனன் அரக்கு மாளிகை கட்டி அதில் உங்களை (பஞ்சபாண்டவர்கள்) அழிக்க நினைத்தான். அவன் நினைத்தால் போதுமா? நீங்கள் அழியவேண்டும் என்று சங்கல்பம் நான் செய்யவில்லை.  நீங்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்ற என்னுடைய எண்ணம் தான் பலித்தது. இப்போதோ, யுத்தபூமியில் போர் செய்யத் தயங்குகிறாய். ஆனால், பூபாரம் தீர்க்க வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன். நீ என்ன நினைத்தாலும், நடப்பதென்னவோ என் முடிவு தான்! அதனால், எதைச் செய்தாலும் என் பொருட்டே நீ செய்கிறாய் என்ற உண்மையை உணர்ந்துகொள், என்றார்.  இதை, பகவதோ பலேன, பகவதே வீர்யேன என்று சொல்வர். பேச்சுவழக்கில் இதனையே, அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பர். செய்பவனும், செயலும், செயலின் பலனும் எல்லாம் இறைவனே ஆகும். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று நம் கடமையைச் செய்தால் செயலால் உண்டாகும் பாவபுண்ணியம் நம்மைத் தீண்டாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !