சபரி வித்யாஷ்ரம் பள்ளியில் உலக அமைதிக்காக பிரார்த்தனை!
ADDED :4675 days ago
புதுச்சேரி: வேதாத்திரி மகரிஷி நினைவு தினத்தையொட்டி உலக அமைதி மற்றும் மக்கள் நலம் பெற சிறப்பு பிரார்த்தனை சபரி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு, உலக சமுதாய சேவா சங்க புதுச்சேரி கிளை அறங்காவலர் முருகையன் தலைமை தாங்கினார். உலகில் வன்முறை அதிகரிப்பதைத் தவிர்த்து அமைதி நிலவ ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும், பயங்கரவாதம் ஒழிய அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் உள்ளிட்டவைகளை வலிறுத்தி பிரார்த்தனை நடந்தது.நிகழ்ச்சியில் சபரி வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.