உடையநாயகி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா
ADDED :4600 days ago
திருவேங்கடம் : கீழவயலி உடையநாயகி அம்மன் கோயிலில் பங்குவி பொங்கல் திருவிழா இரண்டு நாட்கள் நடந்தது.முதல் நாள் இரவு கரக ஆட்டம், நள்ளிரவில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் விசேஷ பூஜையும் நடந்தது. பின்பு மேளதாள வாணவேடிக்கையுடன் அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா நடந்தது. மறுநாள் காலைமுதல் திரளான பெண்கள் கோயிலில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இரவில் கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை கீழவயலி பொதுமக்கள் மற்றும் திருவிழா கமிட்டியார் செய்திருந்தனர்.