காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!
ADDED :4599 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம், நேற்று துவங்கியது. காலை 6:00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றம் முடிந்ததும், பெருமாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் திருவிழாவான, இன்று காலை ஹம்ஸ வாகனம், மாலை சூரிய பிரபை உற்சவம் நடைபெற உள்ளது.