கோயில் வழிபாட்டுக்கு சமமானது எது?
ADDED :4654 days ago
சித்தர்கள் முற்போக்கு சிந்தனையாளர்களாக இருந்தனர். வெறும் பூஜை, சடங்கு, சம்பிரதாயத்தை விட, யதார்த்தத்தையே அவர்கள் விரும்பினர். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுற்றி வந்து மொணமொண என சொல்லும் மந்திரம் ஏதடா? என்கிறார் சிவவாக்கியர். உள்ளத்தில் இருக்கும் கடவுளை கல்லிலும் மண்ணிலும் தேடுகிறீர்களே! என கேள்வி கேட்கிறார். நடமாடும் கோயிலாக இருக்கும் உயிர்களுக்கு நன்மை செய்வது, கோயில் வழிபாட்டுக்குச் சமம். ஆனால், கோயிலில் நடத்தும் அபிஷேக ஆராதனையால் என்ன பயன் என்னும் நோக்கத்தில் படமாடுங்கோயில் பகவற்கு ஒன்றீயில் நடமாடுங்கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா என்று திருமந்திரத்தில் திருமூலர் பாடுகிறார்.