திருப்போரூரில் சிவதரிசன தியானம்
ADDED :4578 days ago
திருப்போரூர்: திருப்போரூரில் பிரம்ம ராஜ குமாரிகள் அமைப்பின் சார்பில், சிவதரிசன தியானம் நேற்று முன்தினம் நடந்தது.திருப்போரூர் தொண்டை மண்டல ஆதி சைவவேளாளர் திருமண மண்டபத்தில், பிரம்ம ராஜ குமாரிகள் அமைப்பின் சார்பில், நேற்று முன்தினம் பிரதோஷ தினத்தையொட்டி, அண்ணாமலையார் தரிசனம் மற்றும் தியானம் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, சிவனை வழிபட்டனர். சிவபெருமை குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன.