உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகுருநாதபுரம் கோயிலில் இன்று தேரோட்டம்

சிவகுருநாதபுரம் கோயிலில் இன்று தேரோட்டம்

சுரண்டை: சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாதியம்மன் கோயில் தேரோட்டம் இன்று (10ம் தேதி) நடக்கிறது. சுரண்டை சிவகுருநாதபுரத்தில் முப்பிடாதியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (10ம் தேதி) மதியம் 3 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின் முறை மகமைக் கமிட்டி பெரியோர்களும், நிர்வாகிகளும் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !