கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12ம் தேதி பூஜை
ADDED :4671 days ago
தென்காசி: சேரன்மகாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 12ம் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ்மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடந்துவருகிறது. இந்த மாதத்திற்கான பூஜை வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. சித்திரை வருஷ பிறப்பை முன்னிட்டு வரும் 14ம் தேதி மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அனைத்து வகையான அபிஷேகங்களும், அன்னாபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. விழா நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் திறந்திருக்கும். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.