உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளபரமேஸ்வரி கோவில் யுகாதி பண்டிகை

அங்காளபரமேஸ்வரி கோவில் யுகாதி பண்டிகை

பவானி: பவானி, பெரியபுலியூர் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில் யுகாதி பண்டிகை சிறப்பான முறையில் நடந்தது.பவானி கூடுதுறையில் காலை, 9 மணியளவில், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டு, உற்சவர் அம்மனுக்கு மலர்களால் அமைக்கப்பட்டு, சிறப்பு அலங்கார வாகனத்தில் பெரியபுலியூர் கோவிலை நோக்கி அம்மன் திருவீதி உலாவும், பக்தர்கள் தீர்த்தகுட ஊர்வலமும் புறப்பட்டு சென்றது.இந்த ஊர்வலத்தின் போது, பவானி காலிங்காரயன்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் வாய் பூட்டும், முதுகில் நான்கு கத்திகள் குத்தி மலேசிய அலகு குத்தி சென்றார்.இதனை தொடர்ந்து மதியம் பெரியபுலியூர் கோவிலில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம், மஹா தீபாராதனையும், பின் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா குருசாமி, பூசாரிகள் சந்திரசேகரன், ஈஸ்வரன், பழனிசாமி, பாலசுப்பிரமணியம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !