இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
ADDED :4530 days ago
நீதிசாஸ்திரம் என்னும் நூல், நமது வாழ்வில் ஐந்து விஷயங்களை கவனத்துடன் கடைபிடிக்க வேண்டும் என கூறுகிறது. காலை வெயிலில் காய்வது, பிணப்புகையை சுவாசிப்பது, தன்னை விட வயது முதிர்ந்த பெண்ணை மணம்புரிவது, குட்டை நீரைப் பருகுவது, இரவில் தயிர்சாதம் உண்பது இவை ஐந்தும் கூடாது. அதே சமயத்தில் மாலை வெயிலில் காய்வது, வேள்விப்புகையை சுவாசிப்பது, தன்னை விட வயது குறைந்த பெண்ணை மணப்பது, சுத்தமான நீரைக் குடிப்பது, இரவில் பால்சாதம் சாப்பிடுவது ஆகிய ஐந்தும் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.