திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையத்தின் முப்பெரும் விழா!
மதுரை தல்லாகுளம் அழகர்கோயில் ரோட்டில் "மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தின் சார்பில் 14.4.2013 அன்று மதுரை, தானப்பமுதலி தெரு, திருவாவடுதுறை ஆதீன மடத்தில் உள்ள ஸ்ரீருத்ரம் அரங்கத்தில் காலை 10.30 மணிக்கு தமிழ்ப்புத்தாண்டு விழா, நக்கீரர் விழா, சுவாமி விவேகானந்தர் 150வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரகாஷ் வரவேற்புரை நிகழ்த்தவும், சந்திரசேகரன் தலைமையேற்கவும், குருசாமி தேசிகர் பஞ்சாங்கம் வாசிக்கவும், பானுமதி முன்னிலை வகிக்கவும் உள்ளார்கள். திருவிளையாடல் புராணத்தில் நக்கீரர் பற்றி சந்திராவும் சுவாமி விவேகானந்தர் பற்றி சீனிவாசனும் சிறப்புரையாற்றுகிறார்கள். சரவணன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெறுகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக சந்திரசேகரன், அமைப்பாளராக கண்ணன், துணை அமைப்பாளராக விவேகானந்தன், பொருளாளராக பானுமதி ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு 93600 52246.