குற்றாலநாதர் கோயிலில் தாண்டவ தீபாரதனை
ADDED :4675 days ago
குற்றாலம்: சித்திரை விசுத்திருவிழாவை முன்னிட்டு குற்றாலம் கோயிலில் நடராஜர் தாண்டவ தீபாராதனை நேற்று நடந்தது.குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் சித்திரை திருநாள் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடந்து வருகிறது. கடந்த 9ம் தேதி தேரோட்டம் நடந்தது. விழாவில் சிறப்பு பெற்ற நடராஜர் தாண்டவ தீபாராதனை நேற்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தாண்டவ தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ், கோயில் பணியாளர்கள் மற்றும் குற்றாலம், மேலகரம், காசிமேஜர்புரம்,தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை விசு விழாவை முன்னிட்டு சித்ரசபையில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை இன்று (13ம் தேதி) நடக்கிறது.