சொர்ணா கர்ஷன பைரவர் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4629 days ago
கிருமாம்பாக்கம்: நாணமேடு சேஷா ஆசிரமத்தில் சொர்ணா கர்ஷன பைரவர்க்கும், சொர்ணா பைரவி அம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. தவளக்குப்பம் அடுத்த நாணமேடு கிராமத்தில் உள்ள சேஷா ஆசிரமம், விஜய விஸ்வ மாதா ராஜராஜேஸ்வரி பீடத்தில் அமைந்துள்ள சொர்ணா கர்ஷன பைரவருக்கும், சொர்ணா பைரவி அம்பிகைக்கும் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சேஷாத்ரி சுவாமிகள் முன்னிலையில் நடந்த உற்சவத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்சவ ஏற்பாடுகளை முத்து குருக்கள் மற்றும் சேஷா ஆசிரம நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.