பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED :4630 days ago
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. மாலை சுவாமி, அம்பாள் சிம்மாசனத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து காலை, மாலை கேடயம், கற்பகத்தரு, கிளி, பூத, சிங்க, குதிரை, கைலாச, காமதேனு, ரிஷப, நந்தி, அன்ன வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஏப்., 22ல் திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சியும், ஏப்., 23ல் மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். ஏப்., 24ல் காலை 9.30மணிக்கு தேரோட்டம், ஏப்., 25 தீர்த்தவாரி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.