உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றம் லட்சுமி விநாயகர் கோவிலில் பாலாலயம்

திருக்கழுக்குன்றம் லட்சுமி விநாயகர் கோவிலில் பாலாலயம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், லட்சுமி தீர்த்த விநாயகர் கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்வதற்காக, பாலாலயம் நடந்தது. திருக்கழுக்குன்றம் பிரம்ம தீர்த்த குளக்கரையில், லட்சுமி தீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமலிருந்த, இக்கோவிலை சீரமைக்க, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, லட்சுமி தீர்த்த விநாயகர் கோவில் பராமரிப்பு அறக்கட்டளை சார்பில், கோவிலில் திருப்பணிகளை துவக்குவதற்கான பாலாலயம், நேற்று காலை 6:30 மணிக்கு, நடந்தது. இதனை முன்னிட்டு, கோவிலில் உள்ள மூலவர் சிலையை, அத்திமரத்தில் அமைத்து, சிவாச்சாரியார்கள் பாலாலயம் செய்தனர். மூலவர் சிலையை, பக்தவச்சலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு சென்றனர். செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மடத்தை சேர்ந்த சுவாமிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து, லட்சுமி விநாயகர் கோவில் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், ""அறநிலையத் துறை மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன், கோவில் திருப்பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. நான்கு மாதங்களில், திருப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !