முனேஷ்வரர் கோவில் தேர் திருவிழா
ADDED :4656 days ago
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரை முனேஷ்வரர் ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது.நேற்று அதிகாலை முதல் முனேஷ்வருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீப ஆராதனை பூஜைகள் நடந்தது. ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து ஒவ்வொரு வீதியாக சென்றனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீதியாக வலம் வந்த தேர், மாலை நிலையை வந்தடைந்தது. இரவு கலைநிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.