அவன் தான் பெரியவன்
ADDED :4956 days ago
காந்திஜி, அவரது நண்பர் வீட்டுக்குப் போனார். நண்பர் வழிபாடு செய்து கொண்டிருந்தார். காந்திஜி, நண்பருக்காக வெளியில் காத்திருந்தார். இந்த தகவல், நண்பருக்கு தெரிந்ததும் பிரார்த்தனையில் மனம் ஒன்றவில்லை. அவசரமாக முடித்து விட்டு ஓடி வந்தார். ஏன் இப்படி அவசரப்பட்டு வந்தீர்கள்? என்று வருத்தமாகக் கேட்டார் காந்திஜி. நண்பரோ, சமூகத்தில் நீங்கள் பெரிய மனிதர். உங்களுடன் பேசுவதற்காக பிரார்த்தனை நேரத்தைக் குறைத்துக் கொண்டேன், என்று பதிலளித்தார். நம் எல்லாரையும் விட பெரியவர் கடவுள். பிரார்த்தனை என்பது அவரோடு நாம் பேசுகிற நேரம். அவருடன் நீங்கள் பேசும்போது சிறியவனாகிய நான் காத்திருப்பது தானே சரியானது! என்றார். வழிபாடு என்பது வெறும் சடங்கன்று. அது, கடவுளோடு மனம் விட்டுப் பேசும் ஆத்மார்த்தமான உரையாடல். சரி தானே!