கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் 22ம் தேதி தேரோட்டம்
ADDED :4568 days ago
கூவம்: பேரம்பாக்கம் அருகே, கூவம் கிராமத்தில் உள்ள,திரிபுர ந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் சித்திரைபெருவிழாவில், வரும், 22ம் தேதி தேர்த் திருவிழா நடைபெறுகிறது. கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் அருகேஉள்ள கூவம் கிராமத்தில் உள்ள, திரிபுர ந்தரி சமேததிரிபுராந்தக சுவாமி கோவில் சித்திரை பெருவிழாகடந்த, 16ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில், சுவாமிக்குசிறப்பு அபிஷேகமும், தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர்லட்மி காந்தன், தக்கார் சண்முக முதலியார் மற்றும் நால்வர் இறைபணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.