ஸ்தலசயன பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்
ADDED :4620 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், நேற்று கோலாகலமாக துவங்கியது.மாமல்லபுரத்தில், ஸ்தலசயனப் பெருமாள் கோவில் புகழ்பெற்றது. இக்கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக திகழ்கிறது. இத்தலத்தில், இறைவன் ஸ்தலசயனப் பெருமாள், நிலமங்கை தாயார் ஆகியோரை வணங்கி, பக்தர்கள் அருள் பெறுகின்றனர். இங்கு, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று துவங்கியது. இவ்விழா, வரும் 28ம் தேதி வரை நடைபெறும். நேற்று முன்தினம் மாலை, அங்குரார்ப்பணம் நடந்தது. நேற்று காலை காலை, 7:15 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. இரவு, மங்களகிரி உற்சவம் நடந்தது.