ராமநவமியை முன்னிட்டு சீதாகல்யாணம்
ADDED :4565 days ago
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஸ்ரீ ராமர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் மாலையில சீதா கல்யாணமும் நடந்து.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் நடுநாயமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி தனது கையில் கோதண்டம் ஏந்தி கோதண்டராமனாக காட்சியளிக்கின்றார். ராமநவமியை முன்னிட்டு நேற்று காலை, 10 மணிக்கு திருமஞ்சணம், சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ ராமநாமம் கோடி எழுதுதல் துவங்கி வைக்கப்பட்டது. மாலையில் சீதா கல்யாணம் நடந்தது. இரவு ஸ்வாமி வீதியுலா புறப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விழா ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி நாயுடு மகாஜனம் சார்பில், செய்திருந்தனர். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.