விஸ்வநாதரின் தத்ரூப தரிசனம்
ADDED :4566 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் காசி விஸ்வநாதரின் தரிசன நிகழ்ச்சி நடந்தது.அவலூர்பேட்டை சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலில், பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்ணு வித்யாலயத்தின் சார்பில் காசி விஸ்வநாதரின் தரிசன நிகழ்ச்சி நடந்தது. காலையில் சிறப்பு தீபாரதனை நடந்தது. வேள்விக்குண்டத்தில் பக்தர்களது மனக்குறைகள் அர்ப்பணம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகி பிரம்மா குமாரி உமா, சரளா தேவி ஆகியோர் காசி விஸ்வநாதரை குறித்து சிறப்புரை நிகழ்த்தி, தியான பயிற்சி வழங்கினர்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலாராஜவேலாயுதம், டாக்டர் பிரம்மதேவி, பழனி, முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.