உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்திய மகரிஷிக்கு 1008 சகஸ்ரா தீபஒளி தேக தரிசனம்!

அகத்திய மகரிஷிக்கு 1008 சகஸ்ரா தீபஒளி தேக தரிசனம்!

திண்டுக்கல்: அகத்திய மகரிஷிக்கு அவரின் திரு நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தில் கடந்த 19ம் தேதி அன்று திண்டுக்கல் அருகே சிறுமலை வெள்ளிமலை அடிவாரம், அகத்தியர்புரம், தியானப்பாறை அகத்தியர் கோயிலில் மாலை 4 மணிக்கு பூஜை செய்து 5 மணிக்கு சகஸ்ரா தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின் இரவு 7.35 மணிமுதல் அன்னதானம் வழங்கப்பட்டது. அபிஷேகம், அலங்கார ஆராதனைக்கு பின் அகத்திய மகரிஷியின், ஞான திருவடிமுன்பு சகஸ்ரா தீபம் 1008 தீப ஜோதி ஏற்றப்பட்டது.

சித்தர்கள் மகரிஷிகள் தங்கள் பரிபாஷை பாடலில் பாடிய தீப ஜோதி தரிசனம் வாழைகுமரியின் வாழைகும்பியில் கூறிய ஐதீகப்படி முதன் முறையாக தமிழகத்தில் சகஸ்ரா தீபம் 1008 ஏற்றப்பட்டது. அகத்திய மகரிஷியின்  ஒளி தேக தரிசனம் காண ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஏற்பாட்டை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வெள்ளியங்கிரி ஆண்டவர் அன்பர்கள் அன்னதான குழு மற்றும் சிறுமலை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

போன்: 9842569344, 99428 87641, 9786834050.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !