தரங்கம்பாடி கோவில் விழா பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ADDED :4586 days ago
காரைக்கால்: தரங்கம்பாடி ஒழுங்கைமங்களம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு, காரைக்காலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடியுடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பிரசித்தி பெற்ற ஒழுங்கைமங்களம் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி, காரைக்கால் மதகடி, நிரவி உள்ளிட்ட பகுதியில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து சென்றனர். மேள தாளங்கள், கோலாட்டம் ஆகியவற்றுடன், காரைக்கால் நேரு வீதி, பாரதியார் சாலை, கோட்டுச்சேரி, வரிச்சிகுடி, பூவம், தரங்கம்பாடி வழியாக 15 கி.மீ., ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.