கச்சபேஸ்வரர் கோவிலில் காலை ரதோற்சவம்
ADDED :4586 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், இன்று காலை ரதோற்சவம் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், சித்திரை உத்திரப் பெருவிழா, கடந்த 18ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை மற்றும் மாலை, வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.நேற்றுமுன்தினம் இரவு திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. நேற்று இரவு யானை வாகனம் உற்சவம் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு, மகாரதம் உற்சவம் நடைபெற உள்ளது.