குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்ட விழா
ADDED :4646 days ago
திருநெல்வேலி: குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா இன்று (24ம் தேதி) நடக்கிறது. குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. 21ம் தேதி உருகு சட்டசேவையும், மாலையில் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சுவாமி நெல்லை டவுனுக்கு எழுந்தருளல் வைபவமும் நடந்தது. 22ம் தேதி வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் நடந்தது. 24ம் தேதி இன்று காலை 7 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது.