உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலைக்கு 1,000 சிறப்பு பஸ்கள்!

திருவண்ணாமலைக்கு 1,000 சிறப்பு பஸ்கள்!

சென்னை: சித்ரா பவுர்ணமியான இன்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, தரிசனம் செய்வர். இதற்காக, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. இன்று அதிகாலை, 5 முதல் இரவு 11 மணி வரை, தொடர்ச்சியாக பஸ்கள் இயக்கப்படும். கூட்டம் அதிகமுள்ள பஸ் நிலையங்களில், பயணிகள் வரிசைப்படுத்தப்பட்டு, சிறப்பு பஸ் எண் குறிப்பிட்டுள்ள, 5 ரூபாய் ரசீது பெற்று பயணிக்க, வசதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !