உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாளுக்கு இளநீர் அபிஷேகம்: மழை வேண்டி பிரார்த்தனை!

பெருமாளுக்கு இளநீர் அபிஷேகம்: மழை வேண்டி பிரார்த்தனை!

ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரிஅரங்கநாதர் கோவிலில், மழை வரம் கேட்டு, ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கஸ்தூரிஅரங்கநாதருக்கு, 1,008 இளநீர் அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடந்தது.ஈரோடு மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. ஆறு, குளங்கள், குட்டைகள் வறண்டு, விளைச்சல் நிலங்கள் யாவும் பயனற்று போனது. மழை வேண்டி, பொதுமக்கள் பலர் வினோதமான பூஜைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், நேற்று காலை, 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது. முன்னதாக, 5.55 மணிக்கு, கோபூஜையுடன், சிறப்பு பூஜை துவங்கியது. 6.10க்கு திருப்பள்ளி எழுச்சியும், 6.20க்கு வாசுதேவபுண்யாஜனம், 6.30க்கு பூர்ணாகுதி நடந்தது.தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன், கஸ்தூரி அரங்கநாதர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 7 மணிக்கு, ஸ்நபன திருமஞ்சனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக காட்சியளித்த பெருமாளுக்கு, 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, 7.10க்கு தீபாராதனையும், உபசாரமும், சாற்றுமறை, பிரசாதம் வழங்கல் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !