உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் எழுந்தருளிய கிரகணசுவாமி!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் எழுந்தருளிய கிரகணசுவாமி!

ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து, கிரகணத்திற்குரிய சுவாமி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில், எழுந்தளினர். இரவு 1.30 மணிக்கு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து, கிரகணத்திற்குரிய சந்திரமவுலீஸ்வரர் சுவாமி (பலிநாயகர்), உமா அம்மன், சின்ன ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்தக்கடலில் எழுந்தருளினர். இரவு 1.35க்கு சுவாமி, அம்மனுக்கு வேத விற்பன்னர்கள், பூஜை, மகா தீபாராதனை செய்து, தீர்த்தவாரி கொடுத்தனர். இரவு 2.30க்கு, சந்திரமவுலீஸ்வரர் சுவாமி, அம்மன், கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர். கிரகண அபிஷேகத்திற்கு பின் கோயில் நடை சாத்தப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !