திருவள்ளூர் பிரம்மோற்சவ விழா: வீரராகவர் ரத்ன அங்கி சேவை!
ADDED :4658 days ago
திருவள்ளூர்: வீரராகவர் கோவிலில், பிரம்மோற்சவ விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, ரத்ன அங்கி சேவை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழாவில், ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் இரவு, கண்ணாடி அறையில் திருமொழி சாற்றுமறையுடன் ரத்ன அங்கி சேவையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக வீரராகவர் அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை, 5:30 திருமஞ்சனமும், காலை, 10:30 துவாதச ஆராதனமும் நடைபெற்றது. நேற்று இரவு, 8:00 மணிக்கு பத்தி உலா நடைபெற்றது. இரவு, அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த கண்ணாடி பல்லக்கில், பெருமாள் புறப்பாடு, இரவு, 10:00 மணிக்கு நடைபெற்றது.