விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
ADDED :4577 days ago
மதுரை: மதுரை ராமராயர் மண்டபத்தில் நேற்றிரவு கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். நேற்று காலை தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின், அனுமார் கோயிலுக்கு வந்தார். அங்கு, அங்கப்பிரதட்சணம் நடந்தது. நேற்றிரவு 11 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு கள்ளழகர் வந்தார். அங்கு தசாவதார நிகழ்ச்சிகள் துவங்கின. முதலாவதாக முத்தங்கி சேவை அலங்காரத்தில் கள்ளழகர் அருள்பாலித்தார். பின், ஒவ்வொரு அவதார நிகழ்ச்சியாக விடிய, விடிய தசாவதார காட்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.