உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளவனூர் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம்

வளவனூர் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம்

விழுப்புரம்: வளவனூர் சலத்துவாழி முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது. வளவனூர் சலத்துவாழி முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று சித்திரை பெருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 18ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பின்னர், 19ம் தேதி சுவாமி சிங்கவாகனத்திலும், 20ம் தேதி வேப்பங்கிளை வாகனத்தில் வீதியுலா மற்றும் 12ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 9 : 00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வளவனூர் பேரூராட்சி தலைவர் முருகவேல், கோவில் தர்மகர்த்தா அருணாச்சலம், முன்னாள் தர்மகர்த்தா சிவராமன் உள்ளிட்டோர் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு செடல் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு , சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !