அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா
                              ADDED :4569 days ago 
                            
                          
                          
உத்திரமேரூர்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா சிறப்பாக நடந்தது. அருங்குன்றம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சித்திரை திருவிழா, கடந்த 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், 208 பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பகல், 12:00 மணிக்கு, சீர் வரிசை கொண்டு வந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, தீ மிதி திருவிழா நடந்தது. பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 10:00 மணிக்கு, அம்மன் வீதியுலா நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.