வரதராஜ பெருமாள் தேரோட்டம்!
ADDED :4569 days ago
உத்திரமேரூர்: உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோவிலில், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.உத்திரமேரூரில் உள்ள சுந்தர வரதராஜப் பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், கடந்த 19ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் விழாவில், கருடசேவை உற்சவம் நடந்தது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று, தேரோட்டம் நடந்தது. சுந்தர வரதராஜப் பெருமாள், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, முக்கிய வீதிகளை வலம் வந்தார். இதில், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர். வழிநெடுகிலும், பக்தர்கள் திரண்டு நின்று, பெருமாளை வழிபட்டனர்.