கச்சபேஸ்வரர் கோவிலில் வெள்ளி தேர் உற்சவம்!
ADDED :4675 days ago
காஞ்சிபுரம்: கச்சபேஸ்வரர் கோவிலில், வெள்ளித்தேர் உற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் கச்சபேசப் பெருமான் கோவிலில், சித்திரை உத்திரப் பெருவிழா, கடந்த 18ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. விழாவின், 10ம் நாள் உற்சவமான நேற்று முன் தினம் காலை, நடராஜர் தரிசனமும், அதைத் தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு, ஸ்ரீசுந்தராம்பிகையுடன், ஸ்ரீகச்சபேசப் பெருமான் வெள்ளித் தேரில் எழுந்தருளி, வீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் இறைவனை வழிபட்டனர்.