உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் சீதாராமர் திருக்கல்யாணம்

கோதண்டராமர் கோவிலில் சீதாராமர் திருக்கல்யாணம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை, கோதண்டராமர் கோவிலில், சீதா ராமர் திருக்கல்யாணம் சிறப்பான முறையில் நடந்தது.ஆர்.கே.பேட்டை, திருத்தணி சாலையில், புகழ்பெற்ற கோதண்டராமர் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 19ம் தேதி, ராம நவமி விழா துவங்கியது. நேற்று முன்தினம், சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. ஒன்பது நாட்கள் நடந்த வைபவத்தில், தினமும் மூலவர் கோதண்ட ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு, கடந்த 20ம் தேதி, கங்காதரன் குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும், ராமகதா சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டன. நேற்று முன்தினம், கோவில் முன் மண்டபத்தில், சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு, உற்சவர் வீதியுலா நடந்தது. வாண வேடிக்கையுடன் நடந்த ஊர்வலம், முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. பெண்கள், தீபாராதனை எடுத்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !