திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் குவியும் பக்தர்கள்!
ADDED :4552 days ago
காரைக்கால்: கோடை விடுமுறையால், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பரிகார தலமாக இது விளங்குகிறது. இதனால், நாட்டின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியதையடுத்து, ஏராளமானோர் திருநள்ளார் கோவிலில் குவிகின்றனர். குறிப்பாக சனிக்கிழமைக்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சிறப்பு தரிசனம், பொது தரிசனத்திற்கா, வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.