அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் அலங்கார உற்சவம்!
ADDED :4845 days ago
காஞ்சிபுரம்: அஷ்டபுஜப் பெருமாள் கோவிலில், வேணுகோபால் அலங்கார உற்சவம் சிறப்பான முறையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 24ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் காலை மற்றும் மாலை நேரங்களில், பல்வேறு வாகனங்களில் அஷ்டபுஜப் பெருமாள் எழுந்தருளி அருள் பாலித்தார். 6வது நாள் விழாவான நேற்று, வேணுகோபால் சுவாமி சாத்துப்படி உற்சவமும், இரவு, யானை வாகன உற்சவமும் நடந்தது. 7வது நாளான இன்று, திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை 6:30 மணிக்கு, திருத்தேர் புறப்பாடு நடைபெற உள்ளது. இரவு, அஷ்டபுஜப் பெருமாளுக்கு திருமஞ்சன உற்சவம் நடைபெற உள்ளது.