குருவித்துறை குருபகவான் சன்னதியில் சித்ரா நட்சத்திர உற்சவம்!
ADDED :4558 days ago
குருவித்துறை: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் சித்ரா நட்சத்திர உற்சவம் நடந்தது. நன்மைகள் பெற அனைத்து ராசிக்காரர்களுக்கும் குருபகவான் சன்னதியில் பரிகாரபூஜை நடந்தது. வல்லபபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள், ஊழியர் வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.