வீரபாண்டி மாரியம்மன் விழா: சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்!
ADDED :4574 days ago
தேனி மாவட்டம், வீரபாண்டியில் நடைபெற உள்ள கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.தேனி மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் மே 7-ல் இருந்து 14 வரை சிறப்பு பஸ்களை இயக்குகிறது. மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், போடி, கூடலூர், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சின்னமனூர், தேவாரம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து வீரபாண்டிக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.