ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்காக நடைமேடை!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, சுவாமி சன்னதி அருகே, புதிய நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை என்பதால், ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுவாமி சன்னதியில், பொது தரிசனம் செய்து விட்டு, அம்மன் சன்னதி செல்ல முடியாமல், பக்தர்கள் சிரமப்பட்டனர். இதை நிவர்த்திக்கும் வகையில், 3 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் செலவில், விஸ்வநாதர் சன்னதி இடதுபுறம் மரப்பலகையில், புது நடைமேடையும்; சுவாமி சன்னதி முகப்பில், முன்பு இருந்த, பழைய நடைமேடையை அகற்றிவிட்டு, புதிய நடைமேடையும் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம், சுவாமி சன்னதியில் இருந்து சிரமம் இன்றி, அம்மன் சன்னதிக்கு செல்ல முடியும்.
உண்டியல் வசூல்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், , நேற்று உண்டியல்கள், திறக்கப்பட்டு கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் எண்ணப்பட்டன. 25 லட்சத்து, 80 ஆயிரத்து, 252 ரூபாய், தங்கம் 21 கிராம், வெள்ளி ஒரு கிலோ 290 கிராம் இருந்தது.