மடத்தூர் கருப்பசாமி கோயிலில் கொடைவிழா
தென்காசி: புல்லுக்காட்டுவலசை-மடத்தூர் கருப்பசாமி கோயில் கொடைவிழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது.மடத்தூர் கருப்பசாமி கோயில் கொடைவிழா கடந்த 2ம்தேதி துவங்கியது. அன்று மாலை 6மணிக்கு குற்றாலம் தீர்த்தம் கொண்டு வருதல், இரவு 7மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு விநாயகர் கோயிலில் இருந்து குற்றால தீர்த்தத்தை மேலகுரு பீடத்திற்கு கொண்டு வருதல், இரவு 1மணிக்கு குரு பீடத்தில் பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 1.30 மணிக்குசுடலைமாடசாமி, கருப்பசாமி, மடத்தூர் தென்புறத்தில் உள்ள கருப்பசாமி கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. 3ம்தேதி காலை 7மணிக்கு கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், ருத்ரஜெபம், பஞ்சாமிர்தம், சதுர்வேதம், பாராயணம் மற்றும் அனைத்துசுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம், பாலாபிஷேகம் நடந்தது. பகல் 11மணிக்கு பால்குடம் எடுத்து வருதலும், மதியம் 3மணிக்கு பெருமாள் கோயில் மற்றும் கருப்பசாமி கோயில்களில் பொங்கலிடுதல் நடந்தது. இரவு 7மணிக்கு சிறப்பு பூஜையும், நள்ளிரவு 1மணிக்கு கருப்பசாமிக்கு சைவ படைப்பும், சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று (4ம்தேதி) காலை 10மணிக்கு பொங்கலிடுதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டி நிர்வாக குழு தலைவர்சுப்பாராம், செயலாளர் ராமையா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துவருகின்றனர்.