உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தக்கலை பீர்முகமது ஒலியுல்லா தர்காவில் 24ல் ஞானப்புகழ்ச்சி பாடல்

தக்கலை பீர்முகமது ஒலியுல்லா தர்காவில் 24ல் ஞானப்புகழ்ச்சி பாடல்

தக்கலை: தக்கலை பீர்முகமது ஒலியுல்லா தர்கா ஆண்டு பெருவிழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 24ம் தேதி ஞானப் புகழ்ச்சி பாடல் நடக்கிறது.தக்கலை பீர்முகமது ஒலியுல்லா தர்கா ஆண்டு பெருவிழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று இரவு 9 மணி கொடியேற்றப்படுகிறது. அன்று முதல் 24ம் தேதி வரை மவுலிது ஓதுதலும், 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை மார்க்க பேருரைகளும் நடக்கின்றன.16ம் தேதி இரவில் மறைமொழியும், மாநபியின் வாழ்வும் என்ற தலைப்பிலும், 17ம் தேதி நானிலம் போற்றும் நாயகத் தோழர்கள் என்ற தலைப்பிலும் கோவை போத்தனூர் அன்சாரியா அரபிக் கல்லூரி பேராசிரியர் முஹம்மது யூசுப் சிராஜி பேசுகிறார்.18ம் தேதி இஸ்லாத்தில் மனித நேயம் என்ற தலைப்பிலும், 19ம் தேதி இஸ்லாமிய பெண்களின் கடமைகளும் உரிமைகளும் என்ற தலைப்பிலும் சென்னை செங்குன்றம் ஆயிஷா மஸ்ஜித் தலைமை இமாம் ஹாஜா மொய்னுத்தீன் ஜமாலி பேசுகிறார்.20ம் தேதி தாயிலும் அன்பனே நீதானிரங்குகவே என்ற தலைப்பிலும், 21ம் தேதி இறை ஞானப் பாதையில் இல்லற வாழ்க்கை என்ற தலைப்பிலும் சென்னை பெரம்பூர் ரஹ்மானிய்யா ஜூம்மா மஸ்ஜித் இமாம் அன்வர் பாதுஷா உலவி பேசுகிறார்.22ம் தேதி வணங்குங்கள் வழங்குங்கள் என்ற தலைப்பிலும், 23ம் தேதி மெய்ஞான வாழ்க்கையின் மகத்துவம் என்ற தலைப்பிலும் கோவை அன்சாரிய அரபிக் கல்லூரி முதல்வர் அப்துல் மாலிக் சிராஜி பேசுகிறார்.24ம் தேதி ஞானப்புகழ்ச்சி பாடல் இரவு 9 மணிக்கு துவங்கி அதிகாலை வரை நடக்கிறது. 25ம் தேதி மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது. 27ம் தேதி இரவில் மூன்றாம் ஸியாரத் நேர்ச்சை வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை அஞ்சுவன்னம் பீர்முஹம்மதிய்யா அசோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !